siruppiddy nilavarai.com navarkiri.net

December 27, 2012

இங்கிலாந்து கடற்கரையில் பாறையில் சிக்கிய நீச்சல் வீரர்கள்




தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள Sidmouth, Devon என்ற இடத்தில் உள்ள அழகிய கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தில் நீந்துவதற்கு ஏராளமான உல்லாச பயணிகள் வந்தனர். அவர்களில் இருவர் மிகப்பெரிய அலைகளால் இழுத்து செல்லப்பட்டு, பாறைகளுக்கிடையே சிக்கி, தவித்தவர்களை மீட்புப் படையினர் வந்து போராடி படுகாயத்துடன் மீட்டனர். மீட்புப் படையினருக்கு உதவியாக அங்கிருந்த நீச்சல் வீரர்களும் செயல்பட்டனர்.


இரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு பெண் உள்பட ஆறுபேர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் மற்றும் பாக்ஸிங் தினத்தின் போது Sidmouth, Devon என்ற பகுதிக்கு வந்து நீந்தும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே போவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் உணவுப்பொருட்கள் மற்றும் மதுவகைகளை கொண்டுவந்து, போதை மயக்கத்தில் நீச்சலடிப்பதால், சிலசமயம் ஆபத்தான பாறைகளுக்கிடையே சிக்கி தவிக்கின்றனர்.[புகைபடங்கள்]


இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை அவர்கள் தவிர்த்து, பாக்ஸிங் தினத்தை சிறப்பாக கொண்டாட அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment