சுவிட்சர்லாந்தின் உச்சிப்
பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான டேனியல் ஆல்பிரெக்ட் முழங்கால் சிகிச்சைக்குப்
பின்பு உடல்நலம் தேறி வருகிறார்.
கடந்த வாரம் கனடாவின் மலைப்பகுதியில் உலகப் கிண்ணத்திற்கான பயிற்சியின் போது
கீழே விழுந்த ஆல்பிரெக்ட்டுக்கு மூட்டு எலும்பு விலகியது, மூட்டுச்சாவு
கிழிந்துவிட்டது. இதற்காக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்ததையடுத்து இப்போது உடல்நலம் தேறி வருகிறார். கடந்த வாரம் வியாழக்கிழமை லூயிஸ் ஏரிப் பகுதியில் பயிற்சி பெற்ற ஆல்பிரெக்ட் நான்கு வருடங்கள் கழித்து இப்பயிற்சியில் கலந்து கொண்டார். இவர் ஆஸ்டிரியாவில் உள்ள கிட்பூஹெல் என்ற இடத்தில் உச்சியிலிருந்து சறுக்கி வரும் பயிற்சி செய்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக மூளையும், நுரையீரலும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இவரைச் சில வாரங்கள் நினைவிழந்த நிலையில் (கோமா) வைத்து சிகிச்சையளித்தனர். பின்பு உடல்நலம் தேறி நான்கு வருடங்கள் கழித்துப் போனவாரம் தான் மீண்டும் பயிற்சிக்கு வந்தார். இவ்வாறு வந்த போது திரும்பவும் அவருக்கு முழங்கால் மூட்டு விலகியதால் அறுவைசிகிச்சை நடந்தது. சுவிஸ் உச்சிப் பனிச்சறுக்கு கழகம் வெளியிட்ட அறிக்கையில், "டேனியல் ஆல்பிரக்ட் செவ்வாயன்று பெர்ன் திரும்பினார்" என்று குறிப்பிட்டுள்ளது. நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற ஆல்பிரெக்ட் 2010 டிசம்பரில் மீண்டும் விளையாட வந்தபோது மலையிலிருந்து குதிக்கும் போட்டிகளைத் தவிர்த்துவிட்டார். கடந்த 2011ம் ஆண்டு ஜனவரியில் நடந்த போட்டிகளில் சிலவற்றில் மட்டுமே கலந்து கொண்டார். இப்போது மீண்டும் மலையிலிருந்து குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றார். |
November 30, 2012
உச்சிப் பனிச்சறுக்காளர் ஆல்பிரெக்ட் உடல்நிலையில் முன்னேற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment