siruppiddy nilavarai.com navarkiri.net

December 1, 2012

தாயைக் கொலை செய்த விஞ்ஞானிக்குச் 16 ஆண்டுகள் சிறை

மரபணுவியல் துறையில் விஞ்ஞானி ஒருவர் தன் மாற்றாந்தாயைக் கொன்றதால் வாட் மாநில நீதிமன்றம் அவருக்குப் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. பிரான்சில் உள்ள CNRSல் விஞ்ஞானியாக லாரண்ட் செகாலத்(வயது 48) தனது மாற்றாந்தாய் கேத்தரீன் செகாலத்தை (வயது 67) 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் நாள் வாக்ஸ் - சூர் - மோர்கஸ் நகரில் கொலை செய்தார்.
அரசுத் தரப்பில் கொலைக்கான நோக்கம் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கருவியை நீதிமன்றத்தில் உறுதிசெய்ய முடியாததால் விஞ்ஞானிக்கு சந்தேகத்தின் பலனை அளித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இதற்கிடையே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கில் விஞ்ஞானிக்கு 16 ஆண்டுச் சிறைத்தண்டனை அளித்தது.
இவர் கேத்தரீன் இறந்தவுடன் காவலருக்குத் தகவல் தெரிவிக்காமல் மூன்று மணி நேரம் கழித்துத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இரண்டு முறை தனது உடையை மாற்றியிருக்கிறார். சட்டையிலிருந்த ரத்தக்கறையைப் போக்க சட்டையை துவைத்திருக்கிறார்.
இந்த நடவடிக்கைகள் இவருக்கு எதிராக இருந்தன. இவை தவிர இறந்த கேத்தரீனின் விரல் நகத்தின் இடுக்குகளை பரிசோதித்த போது விஞ்ஞானியின் மரபணுக்கள் இருந்தது தெளிவாயிற்று.
இவரது முகத்திலும் கைகளிலும் காணப்பட்ட பிறாண்டல்களுக்கு இவர் கூறிய காரணம் பொருத்தமாக இல்லை.
அவை இவர் கேத்தரீனை கொலை செய்தபோது கேத்தரீன் கீறியதாக இருக்கலாம் என்பதாலும் இவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியது.
விஞ்ஞானிகள் மீது வழக்குத் தொடர்ந்த இவரது மாற்றாந்தாய் பெற்றெடுத்த பெண்கள் இருவருக்கும் இவர் 30,000 ஃபிராங்க் வழங்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது

No comments:

Post a Comment