சாதாரணமாக ஒரு சில நேரங்களில் அன்புத்தொல்லைகள் நமக்கு அதிகமாகிவிடும்.நட்புகளின் வட்டாரத்திலோ, அல்லது உறவினர்களின் மத்தியிலோ இதுபோன்று நாம் சிக்கித் தவிப்பது உண்டு.
இதைப்போன்றே கணினியிலும் சில தொல்லைகள் அவ்வப்போது இருந்துகொண்டே இருக்கும். அவற்றை நாம் நினைத்தால் கூட தவிர்க்க முடியாது. உதாரணமாக நம் கணினிக்கு பாதுகாப்பு கருதி நாம் நிறுவும் மென்பொருள்களால் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படும்.கணினியிலிருந்து தகவல்களை, கோப்புகளை மற்ற இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுவைதான் USB - Pendrive.
புதியதாக வாங்கும் பென்டிரைவில் யூ3 என்ற மென்பொருள் இணைந்தே நமக்கு விற்பனைக்கு கிடைக்கும்.
U3 என்றால் என்ன? இதனால் என்ன பயன்?
U3 என்பது ஒரு மென்பொருள். இது பென்டிரைவிலேயே நமக்கு பதிந்துதான் விற்பனைக்கு கிடைக்கும். இது எதற்கென்றால் நாம் பென்டிரைவில் முக்கியமான கோப்புகள், தனிப்பட்ட சொந்த கோப்புகள் இப்படி பல்வேறு கோப்புகளை அதில் வைத்திருப்போம். இதுபோன்ற சமயங்களில் மற்றவர்கள் நமது பென்டிரைவை கையாளதவாறு, அதற்கு கடவுச்சொல் கொடுத்து பாதுக்காக்க அமைக்கப்பட்டதுதான் இந்த U3 software. இந்த பென்டிரைவை நாம் அடிக்கடி கணினியில் இணைத்துப் பயன்படுத்தும்பொழுது, ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் கேட்கும். சிலவேளைகளில் இது நமக்குத் தேவையில்லாத தொல்லையாக இருக்கும்.
இம்மென்பொருளை நீக்க எண்ணி Delete கொடுத்தாலும், அது பென்டிரைவிலிருந்து அழியாது அப்படியே இருக்கும். இதற்கு தீர்வாக இணையத்தில் ஒரு மென்பொருள் உள்ளது. அதாவது U3 மென்பொருளை Uninstall செய்தவற்காகவே U3 Uninstaller என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைத்து, முதல் வேலையாக அதில் உள்ள கோப்புகளனைத்தையும் கணினியில் மற்றொரு சேமிப்பகத்தில் (D:, E:, F:) சேமித்துவிடுங்கள்.
பிறகு U3 Uninstaller மென்பொருளை இயக்கி, உங்கள் பென்டிரைவில் உள்ள U3 மென்பொருளை எளிதாக நீக்கிவிடலாம்.
இது பாதுகாப்பு மென்பொருள்தான் என்றாலும், நாம் அடிக்கடி பென்டிரைவை கணினியில் இணைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரும்பொழுதும், ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் வேண்டுகோள் தோன்றி கடவுச்சொல்லை உள்ளிட கேட்கும். இதுபோன்ற செயல் நம்மை படபடப்புக்கு உள்ளாக்கும். இதனால் இம்மென்பொருளை நீக்கவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பே. இச்சூழலில் இந்த U3 மென்பொருளை பென்டிரைவிலிருந்து நீக்கிவிடலாம்.
U3 மென்பொருளை பென்டிரைவிலிருந்து நீக்க U3 Uninstaller மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
http://mp3support.sandisk.com/downloads/launchpadremoval.exe
இந்த வீடியோவில் இம்மென்பொருளைப் பயன்படுத்தி U3 Launchpad நீக்கும் வழிமுறைகளைக் காட்டியிருக்கிறார்கள். பார்த்துப் பயன்பெறுங்கள்

No comments:
Post a Comment