வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012,By .Rajah இணைய உலகின் முதல்வனாகத்
திகழும் கூகுள் நிறுவத்தின் சேவைகளுள் ஒன்றான Google Play Store ஆனது அதே
நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இயங்குதளமான Android-ல் செயற்படக்கூடிய
Application-களை உள்ளடக்கிய தளமாகும்.
இத்தளத்தின் மூலம் Application-களை கொள்வனவு செய்யும் தனது
வாடிக்கையாளர்களுக்காக “try before you buy option” எனும் புத்தம் புதிய வசதியினை
அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது குறித்த ஒரு Application-னை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அதனை உபயோகித்துப் பார்த்த பின்னர் அது பயனுள்ளதாகக் காணப்படின் Application-னின் முழுமையான பதிப்பினை பணம் செலுத்தி தரவிறக்கம் செய்ய முடியும். பயனுள்ள இந்த வசதியின் மூலம் மேலும் அதிகளவான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
October 11, 2012
Google வழங்கும் “try before you buy option”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment