siruppiddy nilavarai.com navarkiri.net

October 11, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 13 பேர் இரகசிய பொலிஸாரின் பிடியில்!

 
வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012,By.Rajah.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த 13 பேர் வத்தளை, ஹெந்தல பகுதியில் வைத்து இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேகநபர்கள் வான் ஒன்றில் நீர்கொழும்பு நோக்கிச் சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் மேலதிக விசாரணைகளுக்கென வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, நீர்கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென குறிப்பிட்பட்டுள்ளது

No comments:

Post a Comment