siruppiddy nilavarai.com navarkiri.net

October 11, 2012

இலங்கை பற்றிய கோவைகள் இரகசிய பட்டியலிலிருந்து நீக்க இந்தியா திட்டம்

 
 வியாழக்கிழமை, 11 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை உட்பட பல நாடுகள் தொடர்பான கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் வேலைகள் நடப்பதாக இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக பி.ரி.ஐ. சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே 70, 000 கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோவைகளை இரகசிய பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பூட்டான், பாகிஸ்தான், ஈரான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், யூரேஷியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகள் தொடர்பான கோவைகளை இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கும் பெரியதொரு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் பினக் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
அணு தொழில்நுட்பம் மற்றும் அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாடொன்றில் பேசியபோது அவர் இதனைக் கூறினார். உலகிலுள்ள அணுவாயுதங்கள் யாவும் அழிக்கப்படும்வரை பாதுகாப்புக்காக அணுவாயுதங்களை வைத்திருக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டெனவும் அவர் கூறினார்.
அணு தொழில்நுட்பம் தொடர்பான சில கோவைகளும் இரகசியப்பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment