siruppiddy nilavarai.com navarkiri.net

September 30, 2012

3 மகன்களுடன் இந்தியப் பெண் பெல்ஜியத்தில் படுகொலை

30.09.2012.By.Rajah.பெல்ஜியத்தில் சீக்கிய பெண், அவரது மூன்று மகன்கள் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்பீர்சிங் (வயது 38).
இவர் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக ரெஸ்டாரண்ட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈட்டர்பீக் பகுதியில் தனது மனைவி, மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேச முயன்ற போது எந்த பதிலும் இல்லை.
சந்தேகமடைந்த அவர், வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி மற்றும் மூன்று மகன்களும் கழுத்து அறுக்கப்பட்டு மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஜஸ்பீர் சிங் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது

No comments:

Post a Comment