siruppiddy nilavarai.com navarkiri.net

September 30, 2012

பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தை விற்க முயற்சி. தாய், புரோக்கர்அதிரடி கைது


Sunday30,September2012.By.Rajah.பிறந்து, 20 நாட்களேயான பெண் குழந்தையை, 5,000 ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி கலைவாணி, 20. கலைவாணி, கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கலைவாணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. கணவர், உறவினர்கள் துணை இல்லாததால், குழந்தையை வளர்க்க முடியாமல் கலைவாணி கஷ்டப்பட்டார்.முதலியார்சத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராஜூ மனைவி பானு, 27விடம், கலைவாணி தன் நிலையை கூறினார். "குழந்தையை யாரிடமாவது விற்றுவிடலாம்' என, பானு ஆலோசனை கொடுத்தார்.

பீமநகர் கோரிமேடு கூனிபஜாரைச் சேர்ந்தவர் பரமசிவம்- முத்துலட்சுமி தம்பதியருக்கு, மூன்று மகன்கள். பெண் குழந்தை இல்லாததால், பானு, கலைவாணியின் பெண் குழந்தையை, முத்துலட்சுமியிடம் கொண்டு போய் கொடுத்தார்.முத்துலட்சுமிக்கும், அவரது மகன்களுக்கும், குழந்தையை பிடித்திருந்தது. குழந்தையை வளர்க்கும் எண்ணத்துடன் இருந்த முத்துலட்சுமியிடம், பானு, 5,000 ரூபாய் கேட்டார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.பாலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து, பெண் குழந்தையை பணத்துக்கு விற்க முயன்ற பானு, குழந்தையின் தாய் கலைவாணி ஆகியோரை கைது செய்தனர்.திருச்சி அரசு மருத்துவனையில் உள்ள, அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment