siruppiddy nilavarai.com navarkiri.net

January 31, 2018

இதோ கூகுள் குரோமில் புதிய வசதி!

பிரபல தேடுபொறித் தளமான, கூகுள் நிறுவனமானது கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், குரோமில் தானாக பிளே(play) ஆகும் குரல்ப்பதிவு மற்றும் காணொளிகளை நிறுத்தம் செய்துகொள்ள முடியும்.
குரல்ப்பதிவு மற்றும் காணொளிகள் தானாகவே இயங்குவதால் இணையப் பயன்பாடு வீணாகிறது. இது போன்ற விளம்பரங்களைத் தடுக்கப் பல்வேறு அப்ளிகேஷன்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுவந்தாலும், வலைதளத்திற்குள்ளே இதுபோன்ற வசதி 
வெளியானதில்லை.
clear: both; text-align: center;"> இந்த நிலையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் கூகுள் குரோமில் இந்த வசதியை பீட்டா பதிப்பில் (Beta Version) வெளியிட்டுச் சோதனை மேற்கொண்டது. அதன் சோதனை ஓட்டம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அதன் முழுப் பதிப்பினை (Version) கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த வசதி கணினிகளில் உள்ள குரோம் செயல்பாட்டிற்காக மட்டும் வெளியிடப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


No comments:

Post a Comment