தொழில் நுட்ப புரட்சியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானியர்கள், மீண்டும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். உலகெங்கும் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் காதலர் தினத்துக்கு இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜப்பானிய இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களின் உள்ளம் கவர்ந்த காதல் ஜோடிகளின் புகைப்படத்துடன் டோக்கியோ நகரில் உள்ள சாக்லேட் கடைகளை முற்றுகையிட தொடங்கியுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள முகங்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, சிலைகள் செய்வதைப் போன்ற அச்சு உருவாக்கப்படுகின்றது.
3-டி தொழில்நுட்ப உதவியுடன் புகைப்படத்தின் அசல் வடிவமாக உருவாகும் இந்த அச்சினுள் சாக்லேட் ஊற்றப்பட்டு, சிறிது நேரம் கழித்து அச்சை திறக்கும் போது உள்ளம் கவர்ந்த காதலன் அல்லது காதலியின் அழகு முகம் சாக்லேட் சுவையில் காதலர் தினத்துக்கு ஏற்ற புதுமை பரிசாக மாறி விடுகின்றது


No comments:
Post a Comment