siruppiddy nilavarai.com navarkiri.net

December 11, 2012

கணனியில் கோப்புகளை கையாள்வதற்கு உதவும் மென்பொருள்

RoboBasket: கணனியில் காணப்படும் கோப்புக்கள், கோப்புறைகளை இலகுவான முறையில் கையாள்வதற்கு உதவுகின்ற ஒரு மென்பொருளாக RoboBasket காணப்படுகின்றது. தானியங்கி முறையிலே கோப்புக்களை ஒழுங்குபடுத்தும் முறையில் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளானது கோப்பு, கோப்புறைகள் போன்றவற்றை நகல் செய்யவும், பிறிதொரு இடத்திற்கு நகர்த்தவும் பயனுள்ளதாகக் காணப்படுவதுடன் அவற்றின் நாமங்களையும் மாற்ற உதவுகின்றது.
இவை தவிர தரவு வகை, கோப்புக்களின் அளவு, கோப்புக்களின் நீட்சி, கோப்புறை காணப்படும் வன்றட்டின் பகுதி, கோப்பின் பெயர், போன்றவற்றின் அடிப்படையிலும் பல செய்கைகளை இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவாக மேற்கொள்ள முடியும். இதனால் அதிகளவான நேரம் மீதப்படுத்தப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி

No comments:

Post a Comment