siruppiddy nilavarai.com navarkiri.net

November 21, 2012

பாகிஸ்தானில் குர்ஆன் எரிப்பு வழக்கு: கிறிஸ்துவ சிறுமி விடுதலை

பாகிஸ்தானில் குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாக ரிம்ஷா என்ற 14 வயது கிறிஸ்துவ சிறுமி மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாக 14 வயது சிறுமி ரிம்ஷா மீது குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டை முஸ்லிம் மத குரு ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், போலி சாட்சியங்களை தயார் செய்தார் என மதகுரு மீது வழக்கு தொடரப்பட உள்ளது

No comments:

Post a Comment