siruppiddy nilavarai.com navarkiri.net

November 14, 2012

தப்பியோடிய கைதிகள் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் !

          
 
By.Rajah.வெலிக்கடைசிறைச்சாலையில்கடந்த வெள்ளிக்கிழமைஇடம்பெற்றகலவரத்தின்போது தப்பியோடிய சிறைக்கைதிகளின்எண்ணிக்கைபற்றிமுரண்பாடான செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கை 20இலும் அதிகமாக இருக்குமென சிலர் கூறுகின்றனர்.
பொரளை மற்றும் தெமட்டகொட பகுதியில் நடந்த தேடுதலின் போது 9பேர் படிபட்டதாக அல்லது சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கலவரம் தொடங்கிய எல் மண்டபத்தில் கடமையிலிருந்த இரண்டு சிறைக் காவலர்கள், வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தப்பியோடியவர்களின் தொகை மூன்று தொடக்கம் 5 வரையானது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரணியொன்று இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
வெலிக்கடை சிறைத் தொகுதியினுள் சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டுவதற்காக பெருமளவிலான விசேட அதிரடிப்படையும் இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment