19.10.2012.By.Rajah. |
ஜெனீவாவின் SOS Medecins
என்ற அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவர் அவசர சிகிச்சை வழங்க மறுத்ததை
தொடர்ந்து 89 வயது மூதாட்டி மரணமடைந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு பெப்ரவரி 10ம் திகதி அன்று ஆறுமுறை அவசர உதவி கேட்டு அந்த
மூதாட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தனக்கு வயிற்றுப்போக்கு இருப்பதால் உடனடியாக வந்து உதவுமாறு வேண்டினார். ஆனால் உதவி கிடைக்கவில்லை. மறுநாள் அவருக்கு நோய்த்தொற்று அதிகமானதையடுத்து அண்டை வீட்டார் அவரை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே இவரது இறப்புக்கு முதல் நாள் அவசர சிகிச்சை மருத்துவர் சிகிச்சையளிக்காததே காரணம் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், மருத்துவரின் அலட்சியம் குறித்து சட்டத்தரனி ஸ்டீபன் குரோடெக்கி வினா எழுப்பிய போது, அந்த மருத்துவர் தான் அந்த மூதாட்டியின் குடியிருப்புக்குப் போன போது அந்தக் கட்டிடத்தில் அவர் எங்கிருந்தார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடிக்க இயலாததால் சில நிமிடங்கள் தேடிப்பார்த்து திரும்பியதாகக் கூறினார். மருத்துவமனைக்கு இவர் திரும்பியதும் மீண்டும் அந்த மூதாட்டியிடமிருந்து அழைப்பு வந்ததாக, மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆனால் அவர் அதற்குள் மற்ற நோயாளிகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் திரும்பவும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குப் போகவில்லை என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக SOS Medicins இன் தலைவரான பியர் ஃபுரோய்டோவாக்ஸ், 2000 வீடுகள் அவசர சிகிச்சை பிரிவில் இணைப்புப் பெற்றுள்ளன. ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் எட்டுபேராவது உதவி கேட்டுத் தொடர்பு கொள்கின்றனர். இவற்றில் நான்கு, அவசர சிகிச்சைக்கு உரியதாக இருப்பதில்லை. மேலும் இறந்துபோன இந்த மூதாட்டி இதற்கு முன்பும் பலமுறை அவசர உதவி கேட்டு அழைத்ததுண்டு. தனியாக வசித்ததால் இவர் அச்சம் தோன்றும்போதெல்லாம் அவசர சிகிச்சை பிரிவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். ஒருமுறை இவர் சாவியை மறந்துவிட்டதால் தீயணைப்புப்படை வீரர்கள் வந்து கதவை உடைத்து இவரது வீட்டிற்குள் போய் இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்றார். இத்தகைய விளக்கங்களைக் கேட்ட நீதிபதி அவசர கால சிகிச்சை அளிக்காத மருத்துவரைக் கடுமையாகத் தண்டிக்காமல் 46,800 ஃபிராங்க் அபராதம் மட்டும் விதித்து விடுதலை செய்தார் |
October 19, 2012
அவசர சிகிச்சை மறுக்கப்பட்டதால் மூதாட்டி மரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment