siruppiddy nilavarai.com navarkiri.net

October 16, 2012

கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசை லிபரல் கட்சி மீண்டும் கைப்பற்றியது!




By.Rajah.கனடாவில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண பாராளுமன்றத்திற்கான தேர்தலில் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி தலைமையிலான லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

மொத்தமாக உள்ள 107 தொகுதிகளில் லிபரல் கட்சி 57 ஆசனங்களையும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி 37 ஆசனங்களையும் புதிய ஜனநாயக கட்சி 17 ஆசனங்களையும் கைப்பற்றியது.

கடந்த ஆட்சிக் காலத்தில் 70 ஆசனங்களுடன் பெரும்பான்மை அரசாங்கமாக விளங்கிய லிபரல் கட்சி இந்த தடவை பெரும்பான்மை ஆட்சியமைக்க குறைந்தது 54 ஆசனங்களை எதிர்பார்த்திருந்த நேரத்தில் அக்கட்சி 53 ஆசனங்களைப் பெற்று சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க தயாராகியுள்ளது.

இதேவேளை இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வியடையும் என்றும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியானது மத்தியில் அமைந்துள்ள கார்ப்பர் தலைமையிலான மத்திய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்துடன் சினேகபூர்வமான உறவுகளைப் பேணியவண்ணம் வலுவான ஒரு மாகாண அரசாங்கத்தை நிர்வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைக்கும் நிலையிலிருந்து பின் தள்ளப்பட்டுள்ளது.

மாகாணத்தில் போட்டியிட்ட முக்கியமான மூன்று கட்சிகளின் தலைவர்களும் வெற்றிபெற்றுள்ளார்கள்: Liberal Dalton McGuinty (Ottawa South), PC Leader Tim Hudak (Niagara-West Glanbrook) and NDP Leader Andrea Horwath (Hamilton Centre).10.10.2012.




 

No comments:

Post a Comment