siruppiddy nilavarai.com navarkiri.net

September 12, 2012

UBS வங்கியில் மோசடி செய்தவரின் வழக்கு விசாரணை இலண்டனில் ஆரம்பம்

 
By.Rajah.இலண்டனில் உள்ள UBS வங்கிக்கு 2.3 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்படும் அளவிற்கு மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட க்வேக்கு அடோபோலியின் வழக்கு விசாரணை தொடங்கியது. இலண்டன் நீதிமன்றத்திற்கு வந்த அடோபோலி கானடாவில் பிறந்தவர். பிரிட்டனில் படித்தவர், நாட்டிங்க்ஹாம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.
இவர் மீது இரண்டு மோசடி வழக்குகளும் இரண்டு பொய்க்கணக்கு வழக்குகளும் பதிவாகி உள்ளன. இவ்விரண்டு குற்றங்களையும் இவர் 2008 முதல் 2011க்குள் செய்திருக்கிறார்.
குற்றங்கள் கண்டுபிடிக்கபட்டவுடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் திகதி இவர் இலண்டனில் கைது செய்யப்பட்டார். பின்பு கடந்த யூன் மாதம் 8 திகதி பிணையில் விடுதலையானார். இவர் உடலில் மின்னணு அட்டை பொருத்தப்பட்டது.
UBS வங்கி இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. முதலில் S & P 500, DAX போன்றவற்றில் இவரது ஊக வணிகத்தால் 2 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டதாக அறியப்பட்டாலும் பின்பு அது 2.3 பில்லியனாகத் திருத்தப்பட்டது.
அதிகபட்ச நஷ்டம் ஏற்பட்டதால் UBS வங்கியின் தலைமை நிர்வாகி ஆஸ்வால்ட் குரூபெல் பதவி விலக நேர்ந்தது. அவர் முதலில் மறுத்தாலும் வங்கியின் கௌரவத் தலைவரான நிக்கோலஸ் சென்னின் கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்தும் அடோபோலி கைதானதும் குரூபெக் பதவி விலகினார்.
செர்கியோ எர்மோட்டி புதிய தலைவரானார். இவர் UBS வங்கியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதே நமது கடமை என்றார்

No comments:

Post a Comment