siruppiddy nilavarai.com navarkiri.net

September 26, 2012

கூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய உத்தரவு

27.09.2012.By.Rajah.கூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்கோவை(Fabio Jose Silva Coelho) கைது செய்ய பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுளின் யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்கள் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அது போன்று ஒவ்வொரு நாளும் இந்த யூடியூப்பில் புதுப்புது வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள் யூடியூப்பில் வந்திருக்கின்றன.
மேலும் அவரை பற்றி தாக்கும் வகையில் அந்த வீடியோக்கள் வந்திருக்கிறன. எனவே இந்த வீடியோக்கள் பிரேசிலில் தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கருதி அந்த வீடியோக்களை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூகுளுக்கு ஏற்கனவே பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதை கூகுள் செய்யவில்லை. அதனால் அல்சிடஸை கைது செய்ய மட்டோ க்ராசோ டு சோல் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி பால்வியோ பெரன் உத்தரவிட்டிருக்கிறார்.
மேலும் 24 மணி நேரத்திற்குள் அந்த மாநிலத்தில் யூடியூப் வீடியோக்கள் தடை செய்யப்படவும் உத்தரவிட்டிருக்கிறார்.
ஆனால் கூகுளின் தலைவரை கைது செய்ய எந்தவித அதிகாரப்பூர்வ கட்டளையும் வரவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment