Samsung நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy Note 3 Neo இனை ஜேர்மனியில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
579 யூரோக்கள் பெறுமதியான இந்த கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 720 x 1280 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 2G, 3G, 4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Quad-Core 1.3 GHz Cortex A7 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM, சேமிப்பு நினைவகமாக 16 GB என்பன தரப்பட்டுள்ளன.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களைக் கொண்ட துணையான கமெரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment