siruppiddy nilavarai.com navarkiri.net

December 6, 2013

வாடிக்கையாளர்களுக்கு அமேசான் வழங்கும் அதிரடிச் சலுகை


பல்வேறு பொருட்களை ஒன்லைன் மூலம் விற்பனை செய்துவரும் அமேசான் தளமானது தற்போது அதிரடிச் சலுகை ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை தனது தளம் மூலம் கொள்வனவு செய்பவர்களுக்கு 50GB ஒன்லைன் சேமிப்பகத்தினை வழங்குகின்றது.
முற்றிலும் இலவசமான இந்த சலுகையினை பெறுவதற்கு Samsung, LG, Motorola, HTC போன்ற தயாரிப்புக்களை கொள்வனவு செய்ய வேண்டும்.

இச்சலுகையினை இலவசமாக ஒரு வருடத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் அதன் பின்னர் வருடத்திற்கு 25 டொலர்கள் செலுத்தி தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 

No comments:

Post a Comment