siruppiddy nilavarai.com navarkiri.net

October 10, 2013

குரோம் உலாவி பற்றி அறிய தகவல்கள்


இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி எது என்று கேட்டால் அது குரோம் பிரவுசர் தான்.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன.
மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது.

இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
மவுஸ் வழியாக மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் வழிகள் மூலமாகவும், பல செயல்பாடுகளை குரோம் பிரவுசரில் மேற்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக Ctrl +1 தொடங்கி, Ctrl + 8 வரை அழுத்தினால் பிரவுசரில் திறக்கப்பட்டுள்ள இணைய தளங்களை அந்த எண் வரிசையில் இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். இதன் செட்டிங்ஸ் மாற்ற (Alt +F / Alt+E) பயன்படுத்தலாம்.

Ctrl+D அப்போதைய இணைய தளத்திற்கு புக்மார்க் அமைக்கிறது.
Ctrl+H குரோம் ஹிஸ்டரியைத் தருகிறது.
Ctrl+J டவுண்லோட்ஸ் பிரிவிற்குச் செல்கிறது.
Ctrl+K அட்ரஸ் பார் வழியே, மிக வேகமான தேடலுக்கு வழி தருகிறது.
Ctrl+N புதிய விண்டோ திறக்கப்படுகிறது.
Ctrl+Sht+D அப்போது திறக்கப்பட்டிருக்கும் அனைத்து டேப்களையும், ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கிறது.
Ctrl+Sht+T மூடப்பட்ட ஒரு டேப்பினைத் திறக்கிறது.

நாம் பயன்படுத்தும் எக்ஸ்டன்ஷன் அல்லது அப்ளிகேஷன்களுக்கு, நாமாகவும் ஷார்ட் கட் கீ தொகுப்பினை அமைக்கலாம்.
Alt+F/Alt+E மூலம் குரோம் மெனு சென்று Settings | Extensions பிரிவில் இச்செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
chrome://bookmarks என டைப் செய்து புக்மார்க்ஸ் பக்கத்திற்குச் செல்
லலாம்.
chrome://setting என்பது செட்டிங்ஸ் பக்கத்தினைத் திறந்து கொடுக்கும்.
இதே போல எக்ஸ்டன்ஷன் பக்கம் திறக்க chrome://extensions என அட்ரஸ் பாரில் அமைத்து என்டர் செய்திட வேண்டும்.
ஹிஸ்டரி பக்கம் கிடைக்க chrome://history என அமைக்க வேண்டும்
 

No comments:

Post a Comment