Kogan எனும் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Kogan Agora எனும் இக்கைப்பேசிகள் 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MT6589 Mediatek Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
இவற்றின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக காணப்படுவதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
இவற்றின் விலையானது 189 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment