siruppiddy nilavarai.com navarkiri.net

August 27, 2013

Xolo நிறுவனம் அறிமுகபடுத்தும் புதிய வகை அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

Xolo நிறுவனம் அறிமுகபடுத்தும் புதிய வகை அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Q1000S எனும் ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகப்படுத்தவிருப்பதாக Xolo நிறுவனம் அறிவித்துள்ளது.
5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விசேட அம்சமாக 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும், 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் காணப்படுகின்றது.
மேலும் 16GB சேமிப்பு நினைவகத்தைக் கொண்ட இக்கைப்பேசியின் விலையானது 300 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. {காணொளி,}
 

No comments:

Post a Comment