சீன நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ள Umeox X5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியே தற்போதுள்ள கைப்பேசி வகைகளுள் மிகவும் மெலிதான தோற்றம் கொண்டதாக கருதப்படுகின்றது.
இக்கைப்பேசியானது அடுத்த மாதம் இடம்பெறவுள்ள IFA நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 5.3 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 5.6 மில்லிமீற்றர்கள் தடிப்புடையதாக காணப்படுகின்றது.
மேலும் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதுடன், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது
No comments:
Post a Comment