ASUS நிறுவனத்தினால் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் MeMo Pad FHD 10 LTE எனும் புத்தம் புதிய டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 10 அங்குல அளவு மற்றும் 1920 x 1200 Pixel Resolution உடைய IPS தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 178 டிகிரி பார்வைக் கோணத்தை உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 572 கிராம்களே நிறையுடைய இந்த டேப்லட் ஆனது 9.9 மில்லிமீற்றர்கள் தடிப்புடையதாக காணப்படுகின்றன.
இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா மற்றும் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக இயங்கக்கூடிய மின்கலம் போன்றனவும் தரப்பட்டுள்ளன
No comments:
Post a Comment