உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் சோனி நிறுவனமானது தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Xperia M ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
4 அங்குல அளவுடையதும், 854 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Dual Core Qualcomm Snapdragon S4 Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
Android 4.1 Jelly Bean இயங்குதளத்தனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக VGA கமெராவும் காணப்படுகின்றது.
மேலும் இவற்றின் சேமிப்பு வசதியானது 4GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்டின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கக்கூடியதாகவும், காணப்படுகின்றது.
No comments:
Post a Comment