siruppiddy nilavarai.com navarkiri.net

April 7, 2013

கொமன்வெல்த்தை புறக்கணிக்கக் கோரி விஜய் ரசிகர்கள்

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடது என வலியுறுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் இந்தியப் பிரதமருக்கு நூறுக்கு மேற்பட்ட தந்திகளை அனுப்பி நூதனப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட விஜய் மன்றம் சார்பில் தந்தி அனுப்பும் போராட்டம் நடந்தது.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தந்தி அலுவலகத்தில் இருந்து கோவை மாவட்ட விஜய் மன்ற தலைவர் சம்பத்குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் தந்திகளை அனுப்பினர்.
அந்த தந்தியில் தமிழர்களை கொன்று குவித்த இன அழிப்பு கொடூரன் தலைமையில் இலங்கையில் நடக்க இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லக்கூடாது.
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழர்களை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிருந்தன.

No comments:

Post a Comment