பெலாரஸ் நாட்டை சேர்ந்த நாய்க்கு அமெரிக்கர் ஒருவர் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பெலாரசின் புடோச்கா நகரை சேர்ந்தவர் வைசலி போடாபோவ்.
இவர் ஜூலிக் என்ற நாயை வளர்த்து வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு புடோச்கா நகருக்கு, அமெரிக்காவை சேர்ந்த பெதோரோவ் என்பவர் வந்தார்.
இவர் வளர்த்த செல்ல நாய் இறந்த துக்கத்தில் இருந்தார். இதற்கிடையே புடோச்கா நகரில் தன்னுடைய செல்ல நாயை போலவே ஜூலிக் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
நாயின் எஜமானர் வைசாலியுடன் பழகிய பெதோரோவ், ஜூலிக்கிடமும் அன்புடன் பழகினார். சமீபத்தில் பெதோரோவ் காலமானார்.
அவர் எழுதிய உயிலில் வைசாலி வளர்க்கும் நாய் ஜூலிக் பெயரில், 5.5 கோடி ரூபாய் அளவுக்கு பணம் சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
திடீர் பணக்கார நாய் ஆகிவிட்ட ஜூலிக்குக்கு தனி, "ஏசி” அறையும், மெத்தை படுக்கையும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு தினமும் 4 கிலோ மாமிசம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இருமுறை குளிப்பாட்டப்படுகிறது.
பத்து வயது நாயான ஜூலிக்கை, "ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்” என பெதோரோவ் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment