siruppiddy nilavarai.com navarkiri.net

April 4, 2013

கற்பழித்த முதியவரை அடித்து?


ஒரு குழந்தை உட்பட இரண்டு பேரைக் கற்பழித்த போர்ன்மவுத்தைச் சேர்த்த ஜீயோஃப்ரே ரீட்(Geoffrey Reed) (57) என்ற முதியவரை, மூன்று இளைஞர்கள் அடித்தே கொன்றுள்ளனர்.
ஸ்டூவர்ட் வார்ஹேம்(Stuart Wareham) (25), லீ வார்ஹேம்(Lee Wareham)(33) ஆகியோர் ஒரு தந்தைக்கும் இரண்டு தாய்க்கும் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் ரீடைக் கொல்ல முடிவெடுத்துத் தமது நண்பரான பெஞ்சமீன் வால்ட்டரையும்(Benjamin Walter)(22) கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
இதற்கு முன்னர் ரீடும், ஸ்டூவர்ட் வார்ஹேமும் வீடில்லாதவர் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். இந்த விடுதி போஸ்கோம்ப் நகரில் சிசில் சாலையில்(Cecil Road) உள்ளது.
ரீடின் நடவடிக்கைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்டூவர்ட் தனது தம்பி லீ மற்றும் அவர் நண்பர் வால்ட்டருடன் சேர்ந்து ரீடை அடித்துக்கொன்றனர். பின்னர் பிணத்தை பெட்டியில் வைத்து அடைத்து காட்டுப் பகுதிக்குள் புதைத்துவிட்டனர்.
சில நாட்கள் கழித்து பொலிஸ் நாய் அந்த பிணத்தை கண்டுபிடித்துவிட்டது. பொலிசார் கொலைகாரர்களைத் தேடிப் பிடித்துவிட்டனர். ஆனால் இவர்கள் ரீட் தொலைந்து போய்விட்டதாகப் பொலிசாரிடம் கூறி கவலைப்பட்டனர். பொலிசார் அதை நம்ப மறுத்து அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சட்டத்தை தம் கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் குற்றவாளிக்கும் இந்த உலகில் வாழ உரிமையுண்டு ஆனால் ஒருவரைக் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று டார்செட் நகர்காவலதிகாரி ஸ்டூவர்ட் பால்மர்(Stewart Balmer) தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment