சுவிட்சர்லாந்திலுள்ள நோவார்ட்டிஸ் மருந்து நிறுவனம் H7ND என்ற பறவை காய்ச்சலுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைமை நிர்வாகி ஜோ ஜிமெனெஸ்(Joe Jimenez) தெரிவித்துள்ளார்.
சீன அதிகாரிகள் ஏற்கெனவே H759 என்ற வைரஸின் மரபணுக் குறியீடுகளை வெளியிட்டுள்ளனர். இந்தக் குறியீடுகளை நோவார்ட்டிஸ் நிறுவனம் தற்பொழுது தடுப்பு மருந்துக்காக பகுப்பாய்வு செய்துள்ளது.
மேலும் இந்த மருந்திற்கான சோதனை முயற்சிகளை எதிர்வரும் வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சீனாவில் சில வாரங்களுக்கு முன்னர் H7N9 என்ற வைரசால் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் 108 பேரில் 22 பேர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
கடந்த புதன்கிழமையன்று தைவான் நாட்டில் ஒருவருக்குப் பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment