siruppiddy nilavarai.com navarkiri.net

March 14, 2013

களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதி ,,,,

வடகிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் நிலையில், சிறீலங்கா அரசாங்கம் களியாட்டச் செலவுக்காக ஒன்டரைக் கோடி ரூபா நிதியை செலவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு விமானமொன்றை விண்ணுக்கு அனுப்பி நூற்றாண்டானதை முன்னிட்டு சிவில் விமான சேவைகள் அமைச்சு நேற்று முன்தினம் நடாத்திய நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக ஒருகோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவாகியதாக உள்ளிடத்து வரவு செலவு அறிக்கைகள் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் உள்ள பொருளாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் விமானத்தை வானுக்கு ஏற்றி ஒரு நூற்றாண்டு பூர்த்தியடைந்ததற்காக இவ்வாறு பணத்தை விரயமாக்கி விழா கொண்டாடுவது பற்றி துரித கதியில் ஆராய வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எதிர்வரும் 18 ஆம் நாள் திறந்துவைக்கப்படவுள்ள மத்தளை விமான நிலையத்திற்கு வந்துபோகின்ற உத்தியோகத்தர்களுக்காக 15,000 ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் செலவளிப்பதாகவும், அங்கு வந்து தங்குகின்ற உத்தியோகத்தர்கள் தமக்கேற்றாற்போல பணத்தை விரயமாக்குவதாகவும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிடுகிறது

No comments:

Post a Comment