siruppiddy nilavarai.com navarkiri.net

March 15, 2013

இடைக்கால பிரதமராக 3 பேரின் பெயர்கள் பரிசீலனை?



பாகிஸ்தானில் தற்போதைய ஆட்சி வருகின்ற 16ஆம் திகதி கலைக்கப்பட்டு புதிய இடைக்கால பிரதமரை நியமித்து தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் நிதி மந்திரி அப்துல் ஹாபீஸ் சைக், பொருளாதார நிபுணர் இஷ்ராத் ஹுசைன், ஓய்வு பெற்ற நீதிபதி மிர் ஹசார்கான் ஆகிய 3 பேரின் பெயர்களை பிரதமர் ராஜா பர்வேஸ் அஷரப் சிபாரிசு செய்துள்ளார்.
இவர்களில் ஹசார்கான் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவராக இருக்கிறார். அதேநேரத்தில் அப்துல் சைக்கை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கும் என தெரிகிறது. 16-ந் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பிரதமரும், எதிர்க்கட்சி தலைவரும் பேசி இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.
இதில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால் 2 பேரின் பெயரை பாராளுமன்ற கமிட்டிக்கு அனுப்பி பரிசீலனை செய்து 3 நாளில் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் இதை தேர்தல் கமிஷன் உறுதி செய்து அறிவிக்கும்.
 

No comments:

Post a Comment