siruppiddy nilavarai.com navarkiri.net

February 16, 2013

உடல் உஷ்ணத்தை தணிக்க?


உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது.
வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
பெண்கள் செவ்வாய், வெள்ளியும், ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும். எண்ணெய் தேய்த்துக் குளித்தபின்பு, இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம். இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.
 

No comments:

Post a Comment