
தீர்ப்புக்குப் பின் நிம்மதிப் பெருமூச்சுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் திரு இங் பூன் கே, அவரது மனைவி இருவரையும் பத்திரிகையாளர்களும் புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் இங் பூன் கே எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை எனக் கூறி, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து அவரை முழுமையாக விடுதலை செய்திருக்கிறார் மாவட்ட நீதிபதி சிவசண்முகம்.
46 வயது இங், அரசாங்கக் குத்தகைகள் வழங்குவதில் சலுகை காட்ட சிசிலியா சூ என்பவரிடமிருந்து நான்கு முறை பாலியல் சலுகைகள் பெற்றார் என்று அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஆனால் அதில் ஊழல் சம்பந்தப்படவில்லை என நீதிபதி சிவசண்முகம் தீர்ப்பளித்தார்.
குமாரி சிசிலியா சூவிடமிருந்து பாலியல் சுகம் அனுபவித்ததற்கு தம்மிடம் எந்த உள்நோக்கமோ, ஊழல் புரிய வேண்டும் என்ற எண்ணமோ இல்லை என்ற திரு இங்கின் சாட்சியத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
மேலும், இங்கை ஊழல் புரியத் தூண்டுவதற்காகவே அவருக்கு வாய் வழி உடலுறவு வழங்க சிசிலியா முன்வந்தார் என்பதை தம்மால் நம்ப முடியவில்லை என்றும் திரு சிவசண்முகம் தமது தீர்ப்பில் கூறினார்.
No comments:
Post a Comment