February 5, 2013
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம்; இந்தியர்கள் கவலை
கடந்த ஐந்து ஆண்டுகளில், சிங்கப் பூரில் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம் குறித்து சிக்லாப் வாசிகள் கவலை தெரிவித்தனர். சிக்லாப் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட் டில் நேற்று முன்தினம் சிக்லாப் சமூக மன்றத்தில் 'நமது சிங்கப்பூர் கலந்துரையாடல்' தொடரில் சுமார் 80 சிக்லாப் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத் துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தென்கிழக்கு மாவட்ட மேயர் டாக்டர் முஹம்மது மாலிக்கி, வந்திருந்த குடியிருப்பாளர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிடமும் வேறுப்பட்ட கருத்து களைச் சேகரித்து, கலந்துரையாட லில் அனைவரும் ஈடுபடும் வகையில் வழிநடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment