siruppiddy nilavarai.com navarkiri.net

January 24, 2013

ஒன்லைனில் விண்டோஸ் 8-இனை பேக்கப் செய்வதற்கு

கணனிப் பாவனையாளர்களுள் அனேகமானவர்கள் தமது கணனியில் மென்பொருள் கோளாறுகள் ஏற்படும்போது அவற்றினை இலகுவாக நிவர்த்தி செய்வதற்காக முன்னேற்பாடாக இயங்குதளம் உட்பட ஏனைய மென்பொருட்களை சீரான கால இடைவெளியில் பேக்கப் எடுத்துக்கொள்வது வழமையாகும்.

இவ்வாறு பேக்கப் செய்வதற்கு கணனியிலுள்ள வன்றட்டினை பயன்படுத்துவதைக் காட்டிலும் பிரத்தியேகமான ஒரு சேமிப்பு சாதனத்தை பயன்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.

எனினும் பிரத்தியே சேமிப்பு சாதனம் இல்லாதவர்களுக்கு உதவும் முகமாக Comodo Back Up எனும் ஒன்லைன் பேக்கப் சேவை காணப்படுகின்றது.

இத்தளத்தினை பயன்படுத்தி விண்டோஸ் 8 இயங்குதளம் மட்டுமில்லாது விண்டோஸ் 7, விஸ்டா, எக்ஸ்பி ஆகிய இயங்குதளங்களினையும் இலவசமாக பேக்கப் செய்து கொள்ள முடியும்.

ஒன்லைனில் விண்டோஸ் 8 - இனை பேக்கப் செய்வதற்குஅதி உச்ச அளவாக 5GB வரையான இடவசதி இத்தளத்தில் தரப்பட்டுள்ளதுடன், இவ்வசதியினை இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு மென்பொருள் ஒன்றும் காணப்படுகின்றது.



No comments:

Post a Comment