siruppiddy nilavarai.com navarkiri.net

December 8, 2012

iPhone 5S-ன் புகைப்படங்கள் வெளியானது

 
 
முதன் முறையாக iPhone 5S-ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தைவானை சேர்ந்த முக்கிய நிறுவனமொன்று iPhone 5S-ன் புகைப்படங்கள் மற்றும் அதனை பற்றிய தகவல்கள் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, iPhone 5Sலிருந்து Rear Shell என்ற அமைப்பு முழுவதும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற போனுக்கு பின்னாலிருந்த "X" என்ற குறியீடும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iPhone 5-வின் பின்பகுதியை ஈட்ரேட் சப்பளை என்ற நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்த முறையும் சில பகுதிகளை அவர்களே தயாரிக்கிறார்கள் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் இதற்கான முறையான அறிவிப்பை அப்பிள் நிறுவனம் உலக தொழில்நுட்ப வல்லுனர்கள் மாநாட்டில்(WWDC) வெளியிடுமென எதிர்பார்க்கலாம். இந்த மாநாடு எதிர்வரும் 2013ஆம் ஆண்டில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment