siruppiddy nilavarai.com navarkiri.net

December 12, 2012

அப்பள் நிறுவனத்தின் பங்குகள் சரிவு: முன்னணியில் சாம்சங், கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அப்பிள் நிறுவனம், தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது. சமீபகாலமாக அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங், கூகுள் நிறுவனங்கள் கைபேசிகள், டேப்ளட்கள், மடிக்கணனிகள் போன்றவற்றை குறைந்த விலையிலும், அப்பிளின் தரத்திற்கு நிகராகவும் வழங்க ஆரம்பித்துள்ளன.
இதுதவிர சாம்சங், கூகுள் நிறுவனங்கள் விற்கும் கைபேசிகள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் அப்பளில் அவ்வாறு செய்ய முடியாது.
எனவே சாம்சங், கூகுள் நிறுவன தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இது அப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் $ 705ல் இருந்த அப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கி, தற்போது $ 547 ஆக உள்ளது. மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் $ 420 ஐ தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment