siruppiddy nilavarai.com navarkiri.net

December 22, 2012

சக்தியை வெளிவிடும் லேசர் ஆயுதம் வெற்றிகரமாக

விசேடமாக ஆகாய மார்க்கமான பாதுகாப்பிற்கென தயாரிக்கப்பட்ட அதி உயர் சக்திவாய்ந்த லேசர் ஆயுதம் ஒன்றினை ஜேர்மனை அடித்தளமாக கொண்டு இயங்கும் ஆய்வுக்குழு ஒன்று வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. Beam Superimposing Technology (BST) தொழில்நுட்பத்தில் இரண்டு வகையான லேசர் பிறப்பாக்கிகளை அடிப்படையாக உருவாக்கப்பட்ட இந்த ஆயுதமானது குறித்த ஒரு இலக்கின் மீது 30 kW மற்றும் 20 kW சக்தியினை பிரயோகிப்பதன் மூலம் மொத்தமாக 50 kW சக்தியினை பிரயோகித்து சேதத்தை விளைவிக்கவல்லது.
இந்த ஆயுதமானது மூன்று இலக்குகளை அடிப்படையாக வைத்து பரீட்சிக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக 1,000 மீட்டர்கள் தொலைவிலுள்ள 15 mm தடிப்புள்ள உருக்கு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டும்,
இரண்டாவதாக, 3 கிலோமீட்டர்கள், 2 கிலோமீட்டர்கள் தொலைவில் செக்கனுக்கு 50 மீட்டர்கள் எனும் வேகத்தில் வீழ்ந்துகொண்டிருக்கும் பொருட்களை இலக்கு வைத்தும்,
இறுதியாக, செக்கனுக்கு 50 மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகளை அடிப்டையாகக் கொண்டும் பரீட்சிப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் 10 kW சக்தியை பிறப்பிக்கும் லேசர் ஆயுதம் உருவாக்கிய Rheinmetall நிறுவனமே இந்த ஆயுதத்தினையும் உருவாக்கியுள்ளதோடு எதிர்வரும் காலங்களில் 100 kW சக்தியை பிறப்பிக்கும் லேசர் ஆயுதங்களை தயாரிக்க முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment