By.Rajah.வட்டக்கச்சி கலைவாணி சனசமூக நிலையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டி சவாரி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வட்டக்கச்சி முருகன் ஆலயத்தில் கலைவாணி சனசமூக நிலைய செயலாளர் பொ.சோதிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
பா.உறுப்பினர் சி.சிறீதரன் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான வே.செல்லத்துரை குமாரசிங்கம் சுவிஸ்கரன் பளை பிரதேச த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் சுரேன் முன்னாள் கூட்டுறவுசங்க பொது முகாமையாளர் புவனேஸ்வரன் தர்மபுரம் ம.வித்தியாலய அதிபரும் நல்லதிபர் விருது பெற்றவருமான பூலோகராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நல்லதிபர் விருதுபெற்ற தருமபுரம் மகா வித்தியாலய அதிபரும் வட்டக்கச்சி கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவருமாகிய பூலோகராஜாவிற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் பொன்னாடை அணிவித்து மதிப்பளித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மேற்படி சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்ட மாட்டுவண்டிச் சவாரியில் வெற்றி பெற்ற அணியினருக்கான பரிசில்களாலும் விருந்தினர்களால் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சி கரைச்சி பிரதச சபை உறுப்பினர். சுவிஸ்கரன் கருத்துரை வழங்குகையில்,
நீண்ட காலத்தின் பின் பாரம்பரியப் போட்டிகள் இக்கிராமத்தில் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. அதுவும் இக்கிராமத்தின் சனசமூக நிலைய பங்காளிகளான இளைஞர்களால் ஒழுங்கமைக்கபட்டது.
மேலும் பல பரந்த அளவிலான ஏற்பாடுகளை நடத்துவற்கான முன்னோட்டத்தை சொல்கிறது. இப்போதுள்ள சூழலில் எமது சமூகம் பல்வேறு நெருக்குதல்களால் அலைக்கழிக்கப்பட்டு வேறு சிந்தனைகளை நோக்கி திட்டமிட்டு சிதைக்கப்படும் வேளையில் இப்படியான சனசமூக நிலையங்களின் இயங்கு நிலை கால தேவை கருதி வேண்டப்படுவதாக அமைகின்றது.
இந்த சனசமுக நிலையத்தின் தலைவராக இருக்கின்ற அதிபர் பூலோகராஜா நல்லதிபர் விருது பெற்றிருப்பதும் இந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையத்தின் வலிமையாகவும் இருக்கின்றது.
அதேவேளை பா.உறுப்பினரும் இந்த சனசமூக நிலையத்தின் தோற்றுவாய் காலங்களில் இருந்து இணைந்திருப்பவர் ஆதலால் வட்டக்கச்சி கலைவாணி சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்கு பலம் அதிகமாக இருக்கின்றது.
இத்ததகைய வரப்பிரசாத்தை இந்த சமூகம் பற்றிக்கொள்ள வேண்டும். பல கிராமங்களில் இத்தகைய சனசமுக நிலைய மையங்களில் இருந்துதான் உயர்ந்த சமூக நோக்குள்ள மனிதர்கள் வந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு பாடமாக இருக்கின்றது என்றார்
No comments:
Post a Comment