.
Kankou Keita Mansaré என்ற பெண்ணும், அவரது ஐந்து குழந்தைகளும் கனடாவிற்கு அகதிகளாக 2007 ஆம் ஆண்டு வந்தார்கள். அவர்களை திருப்பியனுப்ப நான்குமுறை குடியுரிமை வழங்கல் அதிகாரிகள் முயற்சி செய்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களை திருப்பியனுப்ப இயலாமல் போய்விட்டது. தற்போது மனிதாபமான அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமையை கனடிய அரசு வழங்கியுள்ளது.
இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, Guineaவில் 15 வயதிலேயே பெண்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருப்பதால் தங்கள் குடும்பத்தில் உள்ள டீன் ஏஜ் பெண்களுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே தாங்கள் Guinea நாட்டிற்கு செல்ல பயப்படுவதாகவும், தற்போது மிகவும் கனடிய குடியுரிமை கிடைத்துள்ளதால், மிகவும் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment