சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
அல்கொய்தா பயங்கரவாத
இயக்கத்தின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட பின்பும், அந்த இயக்கம் இயங்கி வருவதாக
ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சர்வதேச
பயங்கரவாத இயக்கமான அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலர்
கொல்லப்பட்டுள்ளனர். தப்பி பிழைத்தவர்கள் வட ஆப்ரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பதுங்கி உள்ளனர். ஈராக்கிலிருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்று கொண்டது. இதே போன்று ஆப்கானிஸ்தானிலிருந்தும் வெளியேறிவிடுவோம். அல்கொய்தா மற்றும் அதன் தலைமை மீது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட பின்பு, அந்த இயக்கம் வலுவிழந்தது போல் காணப்பட்டாலும், அதுதான் அமெரிக்காவின் முதல் எதிரி என்று ஒபாமாவின் செய்தித் தொடர்பளர் தெரிவித்துள்ளார் |
October 20, 2012
எங்களின் முதல் எதிரி அல்கொய்தா தீவிரவாதிகள் தான்: அமெரிக்கா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment