siruppiddy nilavarai.com navarkiri.net

March 30, 2016

இச்செய்தி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அறிந்திடுவோம்?

.வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் நலன்கருதி புதிய வடிவமைப்பில் புதிய அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இனி வாட்ஸ் அப் மூலம் டெக்ஸ்ட் செய்யும் போது அவற்றை Bold, Italics வகையில் வடிவமைக்கலாம். மேலும் சில அம்சங்களும் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
ஆம் வாட்ஸ் அப் 
சில நாட்களுக்கு முன்னர், வெளியிட்ட அப்டேட்களில் மேம்படுத்தப்பட்ட புகைப்பட பகிர்வு, ஆவணப் பகிர்வு, விடியோ ஜூம் உள்ளிட்ட சில அம்சங்களை அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில் இன்று தனது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ள வாட்ஸ் அப், அதில் டெக்ஸ்ட் செய்யும் அனுபவத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. 
Bold & Italics: வாட்ஸ் அப்-பில்
 இனி நாம் டெக்ஸ்ட்டுகளை Bold மற்றும் italics வகையிலும் எழுதலாம், இதன் மூலம் நம் நண்பர்களுக்கு எழுதும் டெக்ஸ்டுகளில் சில முக்கியமானவற்றை மட்டும் தனித்துவமாக காட்ட இந்த புதிய அம்சம் உதவுகிறது. எவ்வாறு இதனை உபயோகிப்பது? ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு சொற்றொடரையோ bold ஆக மாற்ற எண்ணினால், அந்த சொற்றொடருக்கு முன்பாகவும், பின்பாகவும் Asterisk-ஐ (*) பயன்படுத்த வேண்டும், 
அதைப்போல 
underscore பயன்படுத்தினால் அந்த எழுத்துகள் அனைத்தும் italics ஆக வடிவம் பெற்றுவிடும். கூகுள் டிரைவ் மூலம் ஆவணம் அனுப்புதல்: தற்போது வாட்ஸ் அப்பில், கூகுள் டிரைவ் மூலமாக டாக்குமெட்களை அனுப்ப இயலும். இனி, உங்களது கூகுள் டிரைவில் உள்ள word file, pdf, powerpoint உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ் அப்பில் இணைத்து உங்களது நண்பர்களுக்கு அனுப்பலாம், இதனால் நமது அலுவலக பறிமாற்றங்கள் 
சுலபமாகின்றன
. resume உள்ளிட்டவைகளைக் கூட இனி சுலபமாக அனுப்பலாம். பேக் அப் நேரம்: இனி வாட்ஸ் அப் உரையாடல்களை பேக் அப் செய்யும் போது, அதனை சதவீதத்தில் காண இயலும். இதனால் நாம் செய்யும் பேக் 
அப் எவ்வளவு 
நேரத்தில் முடியும் என்று கணக்கிட உதவுகிறது. இப்புதிய அம்சங்கள் அனைத்தும் 2.12.535 எனும் அப்டேட் முலமாக நமக்கு கிடைக்கும் - 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




No comments:

Post a Comment