siruppiddy nilavarai.com navarkiri.net

May 1, 2014

ஸ்மார்ட் கைப்பேசி விற்பனைக்கு வந்தது

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பயனர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கக்கூடிய இயங்குதளமான CyanogenMod இனைக் கொண்ட புதிய கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ் இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது கைப்பேசியாக OnePlus One ஸ்மார்ட் கைப்பேசி விளங்குகின்றது.

இது 5.5 அங்குல அளவுடைய தொடுதிரை, 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, 3GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB அல்லது 64GB கொள்ளளவினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 299 டொலர்கள் ஆகும்.

No comments:

Post a Comment