siruppiddy nilavarai.com navarkiri.net

February 24, 2014

இலைகளில் வாழும் குள்ள பச்சோந்திகள்

ஆட்காட்டி விரலை விட மிகச்சிறிய இந்த பச்சோந்தி டோக்கியோ நகரில் உள்ள சன்ஷைன் இன்டர்நேஷனல் அக்குவாரியத்தில் இருக்கிறது. இது உலகிலேயே மிக அபூர்வமான புருக்ஷியா மினிமா என்று இலைப் பச்சோந்தி வகையை சேர்ந்தது. இந்தப் பச்சோந்தியின் நீளம் 3 சென்டி மீட்டர்தான், எடை 8 கிராம், அதிபட்சமாக 5 சென்டி மீட்டர் நீளம் வளரும், இவை மடாஸ்கர் தீவில் வசிக்கின்றன. பெரும்பாலான பச்சோந்திகள் மரத்தின் கிளைகளில் தான் வசிக்கும். ஆனால் இதன் வசிப்பிடமே இலைகள் தான். இலைகளில் வந்து உட்காரும் பூச்சிகள் இவற்றின் முக்கிய உணவாகும். இரையை பிடிப்பதற்காகவும், இந்த இனப் பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. நிறம் மாறும் காரணம் பச்சோந்தி எதையாவது கண்டு கோபம் கொள்ளும் போது அச்செய்தி நரம்புகள் மூலமாக இதன் செல்களுக்கு எட்டுகிறது. உடனே அந்த செல்கள் கறுப்பாகி விடுகின்றன. பயமோ, பரபரப்போ ஏற்படும்போது அச்செய்தியை ஏற்றுக்கொண்ட செல்களில் நிறம் மங்கலாகவோ, மஞ்சள் புள்ளிகளாகவோ மாறுகிறது. சூரிய ஒளியும், பச்சோந்தியின் நிறமாற்றத்திற்கு துணை செய்கிறது. சூரிய ஒளி இல்லாத வெப்பமான சூழ்நிலை இதன் நிறத்தை பச்சையாக்குகிறது


No comments:

Post a Comment