siruppiddy nilavarai.com navarkiri.net

January 26, 2014

விரைவில் வருகிறது விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான அப்டேட்


மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரபல்யம் வாய்ந்த இயங்குதளமான விண்டோஸ் 8.1 இற்குரிய முதலாவது அப்டேட் ஆனது மார்ச் மாதம் 11ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மெட்ரோ பயனர் இடைமுகம் கொண்ட அப்பிளிக்கேஷன்களை உள்ளடக்கிய இந்த இயங்குதளமானது டெக்ஸ்டாப் கணினிகளில் இலகுவான முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்புதிய அப்டேட்டே விண்டோஸ் 8.1 இயங்குதளத்தின் இறுதி அப்டேட் ஆக இருக்கும் என கருதப்படுகின்றது. காரணம் அடுத்த வருடம் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment