siruppiddy nilavarai.com navarkiri.net

July 5, 2013

HTC One Mini ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவுள்ளது


உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் HTC நிறுவனமானது தற்போது HTC One Mini அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4.3 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD தொடுதிரையுடன் கூடிய இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுடன் 1.4GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவினையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் Ultrapixel தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா இணைக்கப்படவுள்ளதோடு, microSD கார்ட்டின் உதவியுடன் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கும் வசதியும் தரப்படவுள்ளது

No comments:

Post a Comment