பஸ் கட்டண அதிகரிப்பை வலியுறுத்தி அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்கள் மீது பல இடங்களிலும் கல்வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கதிர்காமம் மற்றும் தெய்வேந்திர முனையினையிலிருந்து கொழும்பை நோக்கிய பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்கள் இரண்டின் மீது இன்றுக்காலை 5.30 மணியளவில் பேருவளையில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் அவ்விரு பஸ்களிளும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன. எனினும், பயணிகள் எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு சேவையில் ஈடுபட்ட பஸ்கள் மீது பல இடங்களில் வைத்து இன்றுக்காலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது


No comments:
Post a Comment