siruppiddy nilavarai.com navarkiri.net

April 12, 2013

முதுகுவலி தீர கோணாசனம்)))



கோணாசனம் செய்யும் முறை:
1. இரு புறமும் உங்கள் கைகளை ஆசுவாசப்படுத்தி நேராக நிற்கவும்.
2. உங்கள் உள்ளங்கைகள் தொடைகளைப் பக்கவாட்டில் தொட்டவாறு இருக்க வேண்டும். 3.  உங்கள் கால்களைக் குறைந் தது இரண்டு அல்லது மூன்று அடி அகலப்படுத்திக் கொள்ளவும்.
4. தோள்பட்டை அளவில் இரு கைகளையும் உயர்த்தி, கைகளை இணையாக வைக்கவும்.
5. மூச்சை உள்ளிழுக்க உங்கள் வலது காலை வலது கோணத்தில் வைத்துக் குனிய வேண்டும்.
6. வலது கையைக் கீழே நேராக வைத்து வலது காலைத் தொட்டு, இடது கையை நேர உயர்த்தவும்.
7. உங்கள் பார்வை மேலிருக்கும் இடதுகை மீதே இருக்க வேண்டும்.
8. அதே சமயத்தில் இடது முட்டி வளையாமல் வைக்கவும்.
9. இப்போது நீங்கள் இருப்பது கோணாசனம், அதாவது உங்கள் உடல் கோணலாக நிறுத்திய கம்பத்தை போன்று இருக்கும்.
10. இந்தக் கோணத்தில் 10-15 நொடிகள் இருங்கள். பின்னர் மெதுவாக நின்று நிதானியுங்கள்
11. இதையே வலது காலுக்கும் பின்பற்ற வேண்டும். இடது புறமாக காலைச் சாய்த்து, இடது கையால் தொட்டவாறு வலது கையை உயர்த்த வேண்டும்.

நன்மைகள்:
• முதுகிற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை உருவாக்கும்;
• உடல் சோர்வு நீங்கும்;
• முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
குறிப்பு:
• விரிப்பைப் பயன்படுத்தவும்.
• முதல்முறை பொறுமையுடன் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.
• ஒரு வார பயிற்சிக்குப் பிறகு 10 நொடிகளை 2 நிமிடமாக்கலாம்.
• ஆசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகே உணவு அல்லது தூக்கம் என்பதை கடைப்பிடிக்க வேண்டும்

No comments:

Post a Comment