லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபரும், சோசலிச கட்டமைப்பை நோக்கி அந்நாட்டு மக்களை அழைத்துச் சென்ற மகத்தான தலைவருமான ஹ_யூகோ சாவேஸின் மறைவையொட்டி புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, தேமுதிக மாவட்டச் செயலாளர் என்.ஜாகீர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் சரவணகுமார் என்ற பகதூர் உள்ளிட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்


No comments:
Post a Comment